அஞ்சவேண்டும் அந்நியன்
சொற்றொடரில் வித்தகன்
பொன்மனதில் வர்த்தகன்
அவனைப் புரிந்தவன் புலவனே
தமிழன் தலை நிமிர
தராதரம் தனக்குண்டு தமிழா
போற்றி பாடு தமிழா
உனக்கே உனக்கு உரிமை
அனைத்தும் உலகில் உனக்காய்
அழகிய தமிழில் அள்ளிக் கொடு
அன்பையும் நன்னெறியையும்
நன்னெறி கண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் வளர்ந்திட நாமும் உயர்ந்திட
தமிழா தமிழனாய் வாழு
தமிழுக்காய் வாழ்ந்துவிடு
அடங்கா தமிழன் அன்பையும் பண்பையும்
கொள்வான் உள்ளத்தின் குறிக்கோளாய்
ஆண்டுகள் பலவாய் ஆண்டவன் தமிழன்
இணைந்து வளைந்து இன்னலில் மிதந்தவன்
இனியும் இல்லை இடர் தமிழுக்கு
அடம்பன் கொடியென திரண்டவன் தமிழன்,
தமிழைக் கண்டால் தமிழனைக் கண்டால்
அஞ்சவேண்டும் அந்நியன் கண்கள்