தமிழ் தாய் வாழ்த்து
பள்ளி வாழ்க்கையின்
இனிமையான நிகழ்வுகளுள்
இதுவும் ஒன்று ,
இன்று அந்த பொற்காலத்தில் இருந்து விடுபட்டு
ஒரு கல்லூரி மாணவனாக
ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவனாக
ஒரு ஆசிரியராக
கூலித் தொழிலாளியாக
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
திடீரென தமிழ் தாய் வாழ்த்து
எங்கேயோ ஒலிக்கும்போது
சீருடை அணிந்த மாணவராக
நம்மை உணர்கிறோம்,
அந்த கணத்தில்
எத்தனையோ நினைவுகள்
கண் முன்னே வந்து செல்கின்றன,
பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்போது
செய்த சேட்டைகளும்
அதற்காக வாங்கிய அடிகளும்
எல்லோரும் கண்களை மூடி
பாடிக்கொண்டிருந்தபோது
கண் திறந்து பார்த்து சிரித்ததும்
மறக்க இயலுமா?