நானும் “நானும்”...

டப். டப்..
கதவு தட்டும் சப்தம்.

யார் அது?
நான் தான்.

நானென்றால்?
என்னை தெரியாதா என்னை...?

தெரியாமல் தானே
கேட்கிறேன்...
கதவை திற.
தெளிவு பிறக்கும்.

பெயரை சொன்னால்
கதவு திறக்கும்.

உன்னை பற்றி
முழுதும் அறிவேன்.

உலகில் யாருமில்லை.
அது உண்மையில்லை.

யார் நீ? - உன்னை
அறிந்துகொள்ள ஆவல் ...
நானே உனக்கு காவல்.

உண்மையை சொல் - இல்லையேல்
கொல்லப்போகிறேன் உன்னை …
கதவை திற - காதலில்
அள்ளப்போகிறாய் என்னை …

கண்ணில் பட்டது - கதவில்
சிறு துளை.
கிடைத்து விட்டது - உன்னை
கண்டறிய ஒரு வலை.

அட! என் மனசாட்சி...!

ஓடிவந்து அணைத்து விட்டேன்
விளக்கை.
இல்லையேல் -
நாடிவந்து படித்திடுவாய்
என் பாவ கணக்கை.

எழுதியவர் : இரா.தாமரைச்செல்வன் (10-Aug-11, 6:17 pm)
பார்வை : 303

மேலே