அவள் தரிசனம் மீண்டும் கிடைப்பது எப்போது

உன்னழகைப் பருகிப் பருகி
மலரின் மதுவை உண்ட வண்டுபோல்
மயங்கிபோனேன்,மயக்கம் தெளிந்தபின்
பார்க்கையிலே நீ அங்கு இல்லை
உனக்கொரு வடிவம் தந்திட
மனம் எண்ணியபோது நீ அங்கு இல்லை
நீ கற்பனைக்கும் எட்டாத அற்புதமல்லவா ?
உன்னை மனத்திலும் இருத்திட இயலவில்லை,
மீண்டும் உன்னை நேரில் பார்த்தாலன்றி
உன் உருவம் மெய்மையாகாது என்
கண்கள் முன்னே, வாராய் பெண்ணே
உன் பேரழகின் அடிமை நான்
உன்னழகின் தரிசனம் எனக்கு
இனி கிடைப்பதெப்போது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (3-May-18, 8:57 am)
பார்வை : 83

சிறந்த கவிதைகள்

மேலே