கையேந்தி வாழுதே நீதிதேவதை
கையேந்தி நிற்குதே
நீதிதேவதை...
அதன் கண்களை மூடியதோ
அரசியல்வாதி கை...!
கை நீட்டாமல் எந்தக்கையும்
சேவை தானே செய்வதில்லை
கறைபடாத காவிகள்
இன்று யாருமில்லை...!
மக்களெல்லாம் மடையர்களாய்
மாறியதினாலே...
அரசியல்வாதிகெல்லாம்
கொண்டாட்டம்தானே...
பொய்யான வாக்குறுதி
கொடுத்தாளுறானே...
அடிமையாய்தானே...
அறிவிலி தலைமையிலே
அதிகாரம் இருப்பதினால்...
கொலை கொள்ளைக்காரனுக்கு
சாதகம் ஆனதால்...
ஓட்டு போட்ட மக்களுக்கு
பாதுகாப்பு இன்றில்லை...!
ஆட்சியாளர் யாவரும்
கட்சிகாரனாய் இருப்பதால்...
ஊழலுக்கு என் நாட்டிலே
பஞ்சமில்லை...!
பத்திரிகை காரனெல்லாம்
பதர்களாய் ஆனதால்...
உண்மைகள் யாவும்
புதைந்துதான் போகுது...
என் நாட்டை நல்லவன்
என்னிக்கு ஆள்வது?
குப்பையைக் கிளறினால்
நாற்றம்தான் எடுக்குமே...
இன்னும்
என் வாயைப்பிடிங்கினால்
வார்த்தைகள் எல்லாம்
கூவமாய் மாறிடும்..!
உண்மையாய்
உணர்வுகள்
உனக்குள் இருந்தால்....
மனசாட்சியோடு நடந்துகொள்
இல்லையென்றால்...
பிணத்திற்கு மரியாதை
அவ்வளவுதான்...!