முதல் காதலே வாழும்!!!...

பிரிந்த பிறகும்
இதயம் மறந்த பிறகும்
சில நேரங்களில்
என் இரவின் கப்பல்
உன் நினைவில் கவிழும்

கண்கள் காட்டை
கனவுகள் தொழவும்

மூச்சு விடும் இடைவெளியில்
என்னுயிர் உன் முகவரி
தேடி அலையும்

அந்நேரம் வானில் காயும் நிலவில்
கரைந்துபோன என் காதல் ஒழுகும்


பிரிந்த பிறகும்
இதயம் மறந்த பிறகும்
ஏனோ காரணமாய்
காதல் ரணமாய்
என் நெஞ்சில் முதல் காதலே வாழும்!!!....

எழுதியவர் : இளங்கதிர் யோகி (5-May-18, 2:57 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 56

மேலே