ஒரு தலைக் காதல்!!!
பகலும் நிலவும் பார்த்துக்கொள்ளும்!!!
இரவு வானில்
சூரியன் துள்ளும்!!!
பாலைவனம் பூத்துக் குளுங்கும்!!!
காளை கண்களின்
பார்வை விளங்கும்!!!
மதில் மேல்
மனம் தூங்கும்!!!
மனன்வனின் வருகைக்காய்
நெஞ்சம் ஏங்கும்!!!
கொஞ்சமும் கருணையின்றி
அவனின் கருவிதழ்
சிரிப்புக்கு ஆவல் காட்டும்!!!
உள்ளத்தில் உண்டாகும்
பருவ மாற்றம்!!!
கண்களுக்குள் மழைக் கூட்டும்!!!
கனவில் அவன் கண்கள்
தீயை மூட்டும்!!!
காலைப் பூவின் பனித்துளி
அவன் சோலை எழில் முகம் காட்டும்!!!
பூமியே சொர்கமாகும்!!!
பூனைச் சத்தம் இசையாகும்!!!
புள்ளியின்றி கோலம் போட
வலக்கை விரல்களுக்குவழி பிறக்கும்!!!
அவன் பார்வை
வந்து என்னை கரைக்கும்!!!
சிறு காதல் வந்து
என்னுயிர் குடிக்கும்!!!
பொன்காற்று வீசும் நேரமெல்லாம் பொன்னழகன் அவனை
மனம் நினைக்கும்!!!
அவன் என்னை ஏற்க்காது
போவானானால்!!!
அவன் நினைவின் வாசனையோடு நான்
இறப்பேன்!!!
கல்லறையில் நான்
வாழ்ந்தாலென்ன
காதலென்றும்
என் மனதில் வாழும்!!!
கால மழை
விழும் நேரம்
மண்ணின் வாசனையில்
என் காதல்வாழும்!!!
கண்ணே கேளடா ....
ஒருநாள்
நான் சாகக் கூடும்
ஆயினும் ஒருநாளும்
சாகாதடா இச்சென்மத்தில்
உன்னோடு நான்
கொண்ட ஒரு தலைக் காதல்!!!....