ஈன்றவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

ஈன்றவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உ ன் உ யிரிலிருந்து எனக்கு உயிர் கொடுத்த அன்னையே
நீ பிறந்ததால் தான் நானும் இந்த மண்ணில் பிறந்தேனே
பாசம் என்பதை நீ பசியறிந்து பாலூட்டுகையில் பெற்றுக்கொண்டேனே
அன்பு என்பதை நான் அழும் பொழுது உ ன் கண்களில் வரும் கண்ணீரில் கண்டேனே
எனக்கு சிறு காயம் பட்டாலும் அதன் வலியை உன் இதயத்தில் உ ணர்த்தாயே
தன் பிறந்தநாளை மறந்து என் பிறந்ததினத்தை திருவிழாவை போல் கொண்டாடினவளே
உன் நேசத்திருக்கு ஈடாய் உ றவாடும் எந்த உறவும் எனக்கு இதுவரை கிடைத்ததில்லையே
நான் இந்நாள் வரை வாழும் வாழ்விற்கு ஆதாரமான அம்மாவே
உன் பிறந்தநாளை நான் கொண்டாடுவது அந்த ஆண்டவனுக்கும் கிடைக்காத வரம் அல்லவா
தாயே உன் பிறந்தநாளில் நான் மேகங்களை கடிதங்களாக்கி வானவில்லின் வண்ணங்களால்
வாழ்த்துமடல்களை எழுதி வசிப்பேணே
அம்மா ஆண்டுதோறும் வரும் உன் பிறந்ததினத்தில் நான் அடைந்த மகிழ்ச்சியைப்போல்
என் மனம் ஒரு நாளும் மகிழ்ச்சியடைந்ததில்லையே
அந்நாளில் எனக்கு அகிலம் கிடைத்தாலும் அதை உன் காலடியில் காணிக்கையாக்குவேனே
அழகு தேவதையான அம்மாவே நீ பிறந்ததினம் எனக்கு அதிசயமான அற்புததினம் அல்லவா - அன்று
உனக்கு அன்பளிப்பாய் என் இதயத்தை கொடுக்கிறேன்
என்றும் இமையாய் இருந்து உன்னை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுக்கிறேன்
நான் இப்பிறவியை எடுக்க என்னை ஈன்றவளே
உ னக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெருவித்துக்கொள்கிறேன் !!!

எழுதியவர் : M Chermalatha (6-May-18, 9:16 am)
சேர்த்தது : M Chermalatha
பார்வை : 910

மேலே