நிலா விடும் தூது

காதல் என்பது நிஜம் தான்
ஒருசேர மூதலிப்ப தென்று
அன்றன்றோ மனம் மகிழும்
ஒரு முனையில் ஆதவன்
மறு முனையில் மாது அவள்
நிலாவிடும் தூது நிலவிடும்


கலந்திருந்ததால் சுகமுண்டு
மானிடத்து இனம் பெருகும்
எனக்காய் நீயுமாய் மாறாய்
உனக்காய் நானுமாய் நன்கு
காத்தலிலும் சுகம் உண்டு
நிலாவிடும் தூது இது


கனவில் கண்ட  அவனை நினைவில் நிரடிக்கொண்டு சுனையில் புரண்டு தினம் நித்திரை வேண்டி வெறும்   மாத்திரை உண்பதினால் நிழல் நிஜமாகிவிடுமோ நிலாவிடும் தூது இது


காலம் துணை நில்லும் ஞாலம் கதை சொல்லும்  இதயம் வதை தள்ளும் எண்ணம் நிறைவேறுமோ என்று கரை சேரும்  அன்றே பரிகாரம்  நிலாவிடும் தூது


அடங்கி ஒடுங்கி மடங்கி
வாழ்ந்தால் தப்பு இல்லை
நடுங்கி கிடுங்கி பதுங்கிய
வாழ்வோ வாழ்வு இல்லை
மென்மையே பெண்மையே
உண்மையினை உணர்த்து
நிலாவிடும் தூது யோசனை
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
""நிலாவிடும் தூது""
கவிதைமணியில்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (6-May-18, 3:45 pm)
Tanglish : nila vidum thootu
பார்வை : 210

மேலே