நீட் தேர்வு திருத்தம் செய்து எழுதப்பட்டது

ஆட்சியாளர்களின்
அதிகாரத்தில்
அரியணை ஏறிய
காலதேவனின் தூதுவன்
நீதி வேண்டி
நீதிமன்றம் சென்றாலும்
தள்ளுபடி தூக்கிட்டு
தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள். - தமிழ்
மாநிலத்தில்
மதிப்பெண் எடுத்தவர்கள் - பிற
மாநிலத்தில்
மதிப்பை இழந்து - இளைஞர்கள் /இளைஞிகள்
கொதிப்புடன் ஓடுகிறார்கள்
தவிப்புடன் அலைகிறார்கள்.
மொழி தெரியாத ஊரில்
வழி தெரியாத தேர்வுக் கூடத்தில் -எதிர்கால
வாழ்வைத் தேடி எழுதுகிறார்கள்.
இவர்கள் அறிவார்களோ - தேர்வுத்தாள்
திருத்தும் அரசியல் திருடர்களை.
எத்தனை நிர்மலா தேவிகள்
நீட் தேர்வு எழுதியவர்களை
நீர்மூலமாக்க போகிறார்கள் ?
தமிழகத்தை ஆள்பவர்களோ
தடுக்க முன்வராமல்
தங்களை மடடும் காப்பாற்றிக் கொள்ள
தந்திரம் புரிகிறார்கள்.- அரசியல்
மந்திரம் படிக்கிறார்கள். - இறுதியில்
வளர துடிக்கும்
இளைஞர்களின்
வாழ்வைக் கடிக்கத்
துடிக்கும் எமனின் தீர்வுக்கு
நிரந்தரத்தீர்வு எழுதிவிட்டார்கள்.

எழுதியவர் : சங்கு சுப்ரமணியன். (6-May-18, 4:15 pm)
Tanglish : need thervu
பார்வை : 116

மேலே