மயிர்

மயிர் !!

நீ இல்ல நாட்களிலே,
என் கரம் கொண்டு சிரம் தழுவி,
உன் வருகைக்காக, தவிக்கின்றேன் !!

நீ உயர உயர,
கத்தியிட்டு, உன் சாவை கண்டு,
ஆடி முன்பு ரசிகின்றேன் !!!

நீ துன்மரணதால் உதிர்கையிலே,
என் வழுக்கை வருடி வருடி,
மனம் வெம்புகிறேன் !!

உன் கருப்பு வெறுப்படைய,
உந்தன் மீது வர்ணம் தீட்டி,
பார்த்து பார்த்து ரசிக்கின்றேன் !!

நீ விதவையாகி கருமை இழக்க,
வெண்மை வர வாடிப்போய்,
இளமை நினைத்து வருந்துகிறேன் !!

நம் இயற்கைதனை மயிராய் மதித்து,
செயற்கையாக மாற்ற முயன்று,
இன்று இயற்கை அழிந்து போக,
நம் உயிர் இன்று மயிராய் போனது வேதனையே!!!!

உங்கள்
தௌபீஃக்

எழுதியவர் : தௌபீஃக் (8-May-18, 4:04 pm)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
Tanglish : mayir
பார்வை : 150

மேலே