நிழல் தேடி
கொளுத்தும் வெயிலில்
நிழலுக்காக
கட்டை மதிலோரத்திலாவது
ஒதுங்கிக்கொள்ளும்
கால்நடைகள்..
இப்போதே யோசி
மனிதனே,
இருக்கும் மரத்தையெல்லாம்
வெட்டிவிட்டு
எங்கே போவாய்,
நிழலில் ஒதுங்க..
வெட்டாதே மரத்தை,
வெட்டவேண்டிய
கட்டாயம் வந்தால்,
நட்டுவிடு புதிதாய்-
வெட்டுமுன்னே...!