அழகு மந்திரம்

கனியின் சுவை நெஞ்சில் பிழியும் சாரீரம்
முல்லை மணம் எங்கும் விரியும் சரீரம்
நடை அசைவில் விலகாத வசீகர நளினம்
சிரித்தால் சிந்திச் சிதறும் பளிங்குப் பவளம்
இதழில் பூத்து முகத்தில் விரியும் செம்புஷ்பம்
மனதை கவர்ந்தாள் இந்த அழகு மந்திரம்
கனவை மிகைத்தாள் இவள் கவர்ச்சி யந்திரம்
அஷ்ரப் அலி