தனிமைக்காரன்

நித்திரையில் நிலவோடு
நித்தம் பொழுதை கழித்ததில்லை,
சித்திரையில் அழகோடு
முத்தச்சுவை சுவைத்ததில்லை,
செல்லும் வழித் தேடல்
நான் அறிந்ததே இல்லை,
கொல்லும் விழி ஊடல்
எனில் புரிந்ததே இல்லை,
களவு போய் தொலைந்ததில்லை,
தொலைந்த எனை தேடியதுமில்லை,
கொஞ்சி கொஞ்சி,
கெஞ்சி கெஞ்சி,
காதலியிடம் பேசியதில்லை,
காதலியின் கோபத் தீச் சுடரும்
எனை சுட்டதே இல்லை,
நீங்கள் நினைப்பதுபோல
இது சொர்க வாழ்வில்லை,
நிஜக் காரணம் காதலியே எனக்கில்லை!

எழுதியவர் : (9-May-18, 1:04 pm)
சேர்த்தது : பிரபாகரன்
பார்வை : 71

மேலே