பிரபாகரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரபாகரன் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 16-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 111 |
புள்ளி | : 36 |
நான் பெரிய கவிஞன் இல்லை. . என் எண்ணங்களை சமர்பிக்கிறேன் ...புடித்தால் விருப்பம் தெரிவியுங்கள்
நித்திரையில் நிலவோடு
நித்தம் பொழுதை கழித்ததில்லை,
சித்திரையில் அழகோடு
முத்தச்சுவை சுவைத்ததில்லை,
செல்லும் வழித் தேடல்
நான் அறிந்ததே இல்லை,
கொல்லும் விழி ஊடல்
எனில் புரிந்ததே இல்லை,
களவு போய் தொலைந்ததில்லை,
தொலைந்த எனை தேடியதுமில்லை,
கொஞ்சி கொஞ்சி,
கெஞ்சி கெஞ்சி,
காதலியிடம் பேசியதில்லை,
காதலியின் கோபத் தீச் சுடரும்
எனை சுட்டதே இல்லை,
நீங்கள் நினைப்பதுபோல
இது சொர்க வாழ்வில்லை,
நிஜக் காரணம் காதலியே எனக்கில்லை!
உன்னைப் போல் முட்டாளும் இருக்கிறான்
உன்னை விட முட்டாளும் இருக்கிறான்
ஆகவே,உன்னை தாழ்த்திக்கொள்ளதே...........!
உன்னைப் போல் அறிவாளியும் இருக்கிறான்
உன்னை விட அறிவாளியும் இருக்கிறான்
ஆகவே,தலைக்கனம் கொள்ளதே...........!
நோட்டு இல்லாததால் வேட்டு வாங்கவில்லை
கண் கசக்கும் இளைய மகன்
படித்த நோட்டு கிழிச்சி பாதிலிலே தொங்க
புது நோட்டுக்கு காத்திருக்கும் மூத்த மகன்
முந்தாணி இல்லாத சீலையில
முன்னும் பின்னும் மறச்சி மானத்த காத்து நிற்கும் முத்த மவ
முழங்கால் பாவடையிலே
என்ன விஷயம் கூட தெரியாத விளையாட்டு கடைசி மவ
காட்டுக்கு போன மனுஷன் இன்னும் காணல
கண் விழித்திருக்கும் கருவாலி மனைவி
காலையில போட * மூட்ட
இன்னும் இறங்கல
ஏரிக்கரையில ஏத்தமா உருள
ஊருக்கு பஞ்சாயத்து சொல்லி
ஒபாமாவுக்கு சவால் விடும் குடிகாரனுக்கு என்ன தீபாவளி
ஏழைக்கு ஏது தீபாவளி
தினம் தீ -வலி தான்
* மூட்ட - சில
கடவுளும் மனிதனாக
பிறந்தால் அவரும்
ஆசைப்படத்தான்
செய்வார்
என்னிடம் நட்பு
கொள்வதற்கு........
என்னவள் கூந்தலில்
வைத்த பின் பூக்களுக்கு
கர்வம் அதிகமாகிறது
தவமாய் இருந்து பெற்றது
நெரிஞ்சி முள்ளாய் குத்தியது
காதலில் கசப்பும் உண்டு
நட்ப்பில் நடிப்பும் உண்டு
என்னவள் வீட்டு பால்கனியில்
ஒரு பௌர்ணமி நிலா
அய்யயோ அது அவ தங்கச்சியா
என்னவள் கூந்தலில்
வைத்த பின் பூக்களுக்கு
கர்வம் அதிகமாகிறது
என்னவள் வீட்டு பால்கனியில்
ஒரு பௌர்ணமி நிலா
அய்யயோ அது அவ தங்கச்சியா
அவள் அம்மா
அறையினுள்
தேவையில்லாத பொருட்களை
கழித்துக் கொண்டிருகிறாள்...
அவள் அப்பா
மாடியில்
எதிர்கால திட்டங்களை
வகுத்துக் கொண்டிருக்கிறார்....
அவள்
தம்பியோ...
நான் கொடுத்த பைசாக்களை
நைசாகக் கூட்டிக்
கொண்டிருக்கிறான்...
அவளோ..
என் எதிரே..
வீட்டைப் பெருக்கிக்
கொண்டிருக்கின்றாள்...
குடும்பமே
கணக்குப் போடுகையில்...
நான் மட்டும்
கணக்குப் பண்ணாமலா
என்ன.!!!