ஊமைக்காதல்

அழகான விழிகள், அவை எதையோ வெறுத்துக் கொண்டிருந்தன!?
அன்பானவன் அருகிலே சென்று அவ்விழிகளுக்குச் சொந்தக்காரியிடம் பேச விழைந்தான்.

அருகே நெருங்கும் முன்னே சுதாரித்த விழிகள் நெருப்பாய் நோக்கிட, கண்டவன்
பயந்தே வாய் உளறினான்.
ஹாய் என்று அசடு வழிய, அவ்விழிகள் மறுபக்கம் நோக்கி புன்னகைத்தன.

என் பெயர் அன்பானவன் என்றவன் முகமம் கூறிட, அவ்விழிகளோ பேசவில்லை.
பேச பிடிக்கவில்லையோ என்ற சந்தேகம் தோன்றிட, அன்பானவன் என்னிடம் பேச
பிடிக்கவில்லையா? என்றிட அவ்விழிகளிடம் இருந்து பதில் வரவே இல்லை.

தலைகவிழ்ந்து கவலையுற்ற முகத்தோடு அங்கிருந்து நகர, அவ்விழிகள் அவனை நோக்கின.
சிரித்த முகத்தோடு தன்னிடம் வந்து பேசியவன் தன்னால் தான் முகம் வாடி
நிற்கிறான் என்று தென்பட்டதோ?
என்னவோ?

அவள் கட்டளைகளின்றி அவளது கால்கள் அவனை நோக்கி நகர்ந்தன.
அவள் தன் அருகில் வந்துவிட்டால் என்பதை உணர்ந்த அன்பானவன் நிமர்ந்து அவளை
நோக்கினான்.

அவள் புன்னகையோடு சைகை செய்தாள் தன்னால் பேசவோ, கேட்கவோ இயலாது என்று.
வாய் பேசாவிடிலும், காது கேளாவிடிலும் முகக்குறிப்பறிந்து வந்து பேசிய
அவளது பண்பு மிக உயர்ந்தது என்று தொன்றியது அன்பானவனுக்கு.

உங்களுக்கு நல்ல மனசிருக்கு என்று திக்கி திணறி அவளிடம் அன்பானவன்
சைகையில் கூறிட, அவனது உதடுகளின் அசைவில் உள்ளதை அறிந்து புன்னகைத்தாள்
அழகு விழியால்.

புன்னகையில் புனிதமடைந்த அன்பானவன் தனது அடையாள அட்டையைக் காட்டி தன்
பெயரை அவள் உணரச் செய்தான்.
நல்ல பெயரென்று சைகை செய்தாள்.

உங்கள் பெயரென்ன என்றதும் இதய சின்னத்தைக் காட்டித் தன் கண்களைக் காட்டினாள்,

இதய விழியாள்?

இல்லை என்று சைகை செய்தாள்.

காதல் விழியாள்?

இல்லை, வேற சொல்லுங்க என்று சைகை செய்தாள்.

அன்பு விழியாள்?

ஆம் என்று சைகை செய்தாள்.

நல்ல பெயரென்றே சைகை செய்திட, தொழி வரக் கண்டு புன்னகையோடு போய்ட்டு
வாரேன் என்று சைகை செய்துவிட்டு கிளம்ப அன்பானவனின் மனம் அவளோடு
கிளம்பியது நானும் வாரேன் என்று.

மனமிழந்த அன்பானவன் வீட்டினுள் நுழைய,
அப்பா, அம்மாவிடம் தான் பார்த்த அன்பு விழியாள் பற்றிக் கூறிக் கொண்டே
சாப்பிட்டான்.

இரவு பொழுது விழிப்பில் கழிய, மறுநாள் அவளைக் கண்டுவரப் புறப்பட்டான்.
அவன் அப்பாவும், அம்மாவும் அவனை அழைத்து நாங்கள் உனக்கொரு பெண் பார்த்து
இருக்கிறோம்,
நாங்கள் பார்த்த பெண்ணைத் தான் கட்ட வேண்டும்,
இன்று பெண் பார்க்க போகிறோம், நீ எங்களுடன் வா என்றிட தாய் தந்தையோடு
சென்றான் அன்பானவன்.

மகிழ்வூந்து சென்று ஓரிடத்தில் நின்றிட, அங்கே பெண் வீட்டார் வரவேற்க
இவன் மனதெல்லாம் அன்பு விழியாளே இருக்க,
பெண் வந்து நின்றாள், நிமிர்ந்து நோக்கினான்,
அன்பு விழியாள் தான் அது.

மறுமொழியின்றி திருமணம் முடிய கண்கள் அவை காதல் மொழி பேசிக் கொண்டிருந்தன.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (10-May-18, 8:49 pm)
பார்வை : 1803

மேலே