மரப்பாச்சிபொம்மைகள்
வீடு முழுவதும்
சுற்றி ஓடி
விளையாடிய தருணங்கள்
கண்ணில்
வண்ணத்தோரணங்களாய்
கண்ணீர் திரையிட்டு
கண்ணாடிச்சட்டநிழலாய்
படம் பிடிக்க
கடல்கடந்த
கணினி வாழ்க்கை
கசக்கத்தான் செய்கிறது.
வீடு முழுவதும்
நீ இறைத்த
மரப்பாச்சிபொம்மைகள்
எட்டுக்கால்பூச்சியுடன்
பொம்மலாட்டம்
ஆடித்தான்
பார்க்கின்றன
இமெயிலில்நீ கசிய
உப்புக்கடலாய் நான்வாழ
இதுவல்லவாழ்க்கை
பனைமரத்துஈரம்
புல்லிற்குத்
தெரியுமா?