திருநங்கை....!

ஒரு முகமாய் பிறந்து

இரு முகமாய் தோன்றும்

புது முகமே அன்று மறைமுகமாய்

வாழ்ந்த விலை முகங்கள்

இன்று நிலை முகங்களாய்

நீந்தும் உலகில் தனக்கென

குல முகமாய் கை கோர்த்து

குடும்பமாய் திரு மேனி

திருத்தங்களில் அழகு மேனியாய்

நம்மில் அங்கம் வகித்த

நவமேனியே உன்னை நாங்கள்

திருநங்கை என பெருமிதம்

கொள்கிறோம் ...!

எழுதியவர் : hishalee (11-Aug-11, 3:19 pm)
சேர்த்தது : hishalee
பார்வை : 321

மேலே