யாரும் கண்டுகொள்ளாத மனிதம்

இன்று நான் மாலை வீடு திருப்புவதற்க்காக கோவை லங்கா கார்னர் வழியாக சென்றேன் அப்போது அந்த பாலத்தின் அடியில் என் முழங்கால் நனையும் வரை மழை நீர் அந்த மழை நீரில் உடல் முழுதும் நனைந்த படி ஒரு 70 வயது மதிக்கதக்க ஒரு முதியவர் அமர்ந்திருந்தார் . அவ்வழியே பல வாகனங்கள் அவர் மீது மழை நீரை மேலும் அடித்தவாரு எல்லோரும் பார்த்தும் பார்க்காமலும் சென்றனர். நான் கோவையில் உள்ள ஒரு பாதுகாப்பு இல்லத்தை தொடர்புகொண்டு
அவர்கள் தற்போது வரமுடியாத தூரத்தில் ( ஊர்) இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு அந்த லங்கா கார்னர் அருகில் உள்ள ஒரு தனியார் அவசர ஊர்திக்கு தகவல் சொல்லி அவர்களை அந்த இல்லத்திற்கு அழைத்து வருமாறு சொன்னார்.
அவசர ஊர்தியும் வந்தது அவர்களுடன் நானும் சென்று அவரின் அருகில் சென்று உரையாடினேன்
(அந்த இல்லத்தில் உங்களுக்கு நல்ல உணவு மற்றும் உடை இருக்க இடம் தருவாங்க போகிறீர்களா என்று கேட்டேன் !!! ஆனால் அவர் அங்கு வர மறுத்துவிட்டார். அருகில் இருந்த அவசர ஊர்தி ஓட்டுனர் அவரிடம் உங்கள் ஊர் எது என்று கேட்டார் அதற்கு அவர் சித்தாபுதூர்( கோவை) என்றார் அந்த ஓட்டுனர் அவரிடம் உங்களை உங்கள் ஊருக்கு அழைத்து செல்லவா என்று கேட்டார் !! அவர் கண்கலங்கிய படி " என் என் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இந்த மண்ணுக்குளே இருக்கும் போது
நான் எங்கு போவேன் சாமி என்றார்.
அவரிடம் சாப்பிட எதும் வேண்டுமா என்று கேட்டேன் அதற்கு டீ மற்றும் பிஸ்கெட் வேண்டும் என்றார் அதை வாங்கிகொடுத்தோம் அவர் அதை அருந்தி கொண்டிருக்கும் போது எங்களிடம் பேசினார் ( நான் சொன்னேன் ஐயா நீங்கள் எங்களுடன் வரவில்லை என்றாலும் பாரவா இல்லை நீங்கள் ஏன் தண்ணீர் நனைந்து இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள் போய் பேருந்து நிலையத்தில் உள்ள நிழல் கூடையில் அமருங்கள் என்றேன் ஆனால் அவர் சொன்னார் அங்கு அமர்ந்தால் என்னை சிலர் ( காக்கி மற்றும் மற்றவர்கள்) என்னை அடித்து விரட்டுகிறார்கள் என்றார்.
கடைசியில் அவர் சாமி நீங்க போங்க நான் அப்பறம் எழுந்த அங்கே ( பேருந்து நிலைய நிழல் கூடை) செல்கிறேன் என்று செல்லிவிடார் . ஆனால் கடைசி வரை அவர் அந்த முதியோர் இல்லத்திற்கு வர சம்மதிக்க வில்லை
நானும் என் மனதை கல்லாக்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்
இந்த மாதிரி உள்ளவர்களுக்கு உதவ அரசாங்கம் ஒரு துறையை உருவாக்கினால் நல்லா இருக்கும் .
உதவும் குழுவில் ஒரு மனநல மருத்துவர் இருந்தால் நன்றாக இருக்கும் ( அவர்களின் மன நிலையை புரிந்து அவர்களிடம் உரையாட )
அந்த நிலைமையில் உள்ளவர்களுக்கு தான் அடிப்படை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் ஆனால் மாறாக நாம் அரசாங்கம் லட்சங்களில் சம்பளம் வாங்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளும் அடிப்படை வசதி செய்து தருகிறது( இலவச வீடு, மின்சார கட்டணம் , தொலைபேசி ஆகிய கட்டணம் இலவசம்)
ஆனால் இவர்களுக்கு ஒரு உதவியும் அரசாங்கத்திடமிருந்து கிடைப்பதில்லை
ஆனால் இங்கு நடந்ததையும் அவ்வழியே செல்லும் சில அரசாங்க உயர் அதிகாரிகளும் இவர் அவர்கள் கண்களில் தென்படவில்லையோ?????
50 கோடிகளில் நினைவுச்சின்னமும் 100 கோடிகளில் விழா கொண்டாடும்
நம் அரசியல்வாதிகளின் கண்களில் இவர்கள் போன்றவர்களின் துயரம் தெரியவில்லையோ???

எழுதியவர் : முத்துபாண்டியன் (10-May-18, 9:41 pm)
சேர்த்தது : முத்துபாண்டியன்
பார்வை : 240

சிறந்த கட்டுரைகள்

மேலே