காதல் சொல்லும் முன்

நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலை கெட்ட சிலரை எண்ணி...
காதல் என்ற பெயரில் காம பேச்சுக்கள்..
ஆண்டுக்கு மாத்திற்கு வாரத்திற்கு பெண்ணை மாற்றும் கயவர்கள்...
நல்வன் என காட்ட அவர்கள் பேசும் மதிப்பிற்குரிய, தாழ்மையான, பரிவான, அன்பான, பேச்சுக்கள்....உலகமே நீ ஒன்றை புரிந்து கொள்.... தவறு செய்யகூட யோசனை செய்யாதவன் இருமாப்பு கொள்கிறான்.... ஆனால் உலகம் அவனுக்கு ஆணவக்காரகன்... திமிர் பிடித்தவன்....அகங்காரம்பிடித்தவன்...கோபக்காரன்... என பேர் வைக்கிறது... இன்றளவில் பள்ளி பருவம் தொட்டே காதல் அரும்பி விடுகிறது...மறைக்கப்பட்ட காதல்...வெளிபடுத்தப்படாத காதல்... ஒருதலைக்காதல்...பொழுது போக்கு காதல்....கைவிடப்பட்ட காதல்...வெற்றியடைந்த காதல் என இவற்றுள் ஏதோ ஒன்றனுள் அடக்கம்...ஆனால் இந்தக் காதலில் வெற்றியடைந்தவனை பார்த்து தோல்வியை தழுவியவன் கூறுகிறான் இவர்கள் பெற்றோரை,பெரியோரை மதிக்கவில்லை... சுயநலவாதி்.... நீ ஒன்றை புரிந்து கொள்...அவன் ஒரு பெண்ணுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டான்... ஆனால் நீ கொடுத்த வாக்கை காற்றில் பறக்க விட்டு விட்டு நீ மனைவியிடம் கூட தினம் தினம் நடித்து கொண்டிருக்கிறாய்.... ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்குமே தவிர இது நிதர்சனமான உண்மை.... சங்க நூல்களிலே தலைவன் தலைவி காதல் பற்றி பாடப்பட்டுள்ளது...காமத்தின் வடிகாலுக்கு காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்...நீ சாதி, மதம் இனம், நிறம் ,பெற்றோர் சம்மதம் , உறவுகளின் சம்மதம்,படிப்பு, செல்வம், ஊர் ,மொழி, நாடு, ஜாதகம் இவற்றுக்கெல்லாம் முன்னுரிமை கொடுத்தால் உன் விருப்பத் தகுதிக்கு அப்பெண் பொருந்தவில்லையெனில் அவளிடம் காதலை சொல்லாதே... ஏமாற்றத்தை எல்லோராலும் தாங்கிக்கொள்ள முடியாது... மனதின் வலி பிரசவ வலியை விட கொடுமையானது... கற்பு என்பது உடலை மட்டும் சார்ந்ததல்ல...உள்ளத்தையும் சார்ந்தது... இது ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் பொருந்தும்... - தேவி நரேஷ்குமார்...

எழுதியவர் : தேவி நரேஷ்குமார் (11-May-18, 12:41 am)
சேர்த்தது : தேவி நரேஷ்குமார்
பார்வை : 507

சிறந்த கட்டுரைகள்

மேலே