முதுமொழிக் காஞ்சி 63

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
கள்ளுண் போன்சோர் வின்மை பொய். 3

- பொய்ப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் கள்ளையுண்போன் ஒழுக்கஞ் சோர்வின்மை பொய்.

பதவுரை: கள் உண்போன் - கள்ளைக் குடிப்பவன், சோர்வு இன்மை - ஒழுக்கம் தளராதிருப்பது, பொய் - பொய்யாம்.

கள்ளுண்பவனுடைய ஒழுக்கம் உறுதியாக இராமல் தளர்வடையும், சோர்வு - மனமொழி மெய்கள் தன்வயத்தவல்ல ஆதல்

'கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. 930 கள்ளுண்ணாமை

ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணும் பொழுது, தான் பயன்படுத்தும் போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-May-18, 10:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

சிறந்த கட்டுரைகள்

மேலே