பாவம் பெண் என்ன பாவம் செய்தாள் இறைவா

ஆமைக்கு ஓடு வைத்தாய்
அரவத்திற்கு விடப்பற்கள்
தேள்,தேனீ,குளவிக்கு கொடுக்கு
பச்சோந்திக்கு நிறம் மாற்றம்
ரோசா பூவிற்கு முள்ளும்
நெல்லிற்கு உமியும் , சிறு
கட்டெறும்பிற்கும் கடிவாய்
என்று இயற்கை பாதுகாப்பு
தந்தாய் , படைத்தோனே
என்ன பாவம் செய்தாள் பெண்
அவளுக்கு கற்புதான் எல்லாம்
என்றிருந்தும் நீ இயற்கை
பாதுகாப்பு ஏதும் தராததேனோ
புரியலையே இறைவா!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-May-18, 10:55 am)
பார்வை : 129

மேலே