அவள்

முதல் முதலாய்
அவளை பார்த்தேன்
அவளழகில் ஸ்தம்பித்தேன்
சிலையாய்ப் போனேன்
பின்னவள், இமைகளிரண்டும்
விண்ணின் தாரகைப்போல்
சிமிட்டிட, 'ஜூட்' என்று
அவள் சொன்னதுபோல்
என் காதில் விழ
சிலை நான் மீண்டும்
உயிர்ப்பெற்று எழுந்தேன்
இப்போது அவள் என்னைப்பார்த்து
நாணி சிரித்தாள், என் உள்ளமதை
திருடிவிட்டால், சிறைபிடித்து.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-May-18, 5:29 am)
Tanglish : aval
பார்வை : 123

மேலே