அவள்தான் அழகு

அனிச்சை செயலாக
உந்தன் பெயரை எழுதி
பார்க்கும் எனது கரம் ..!!
உன்னை தாயாய்
மனதில் சுமப்பதன்றோ
நான் வாங்கி வந்த வரம்...!!
எத்தனை துன்பம்
வந்தாலும் கனவிலும் கூட
உன்னை மறவாது என் மனம் ...!!
யுகங்கள் பல சென்றாலும்
யுவதி உன் வழியை தொடரும்
அடியேனது அடி தினம் ...!!
காலங்கள் பல கடந்தாலும்
காட்சிகள் சில மாறினாலும்
என்றும் மாறாதது உன் நற்குணம் ..!!
இந்த ஜென்மம்தனில்
உன்னை கண்டது
முன்ஜென்மத்தின் இவனது தவம் ..!!
உன்னுடன் வாழ்ந்த
ஒவ்வொரு நிமிடமும்
கல்லறையிலும் மடியாத சுகம் ...!!
உன்னை,உன் மனதின் அழகை
வர்ணணிக்க இல்லை தமிழில்
ஓர் வார்த்தை என்பதே சோகம் ...!!
உன் அழகை
உன் அன்பை
உன் தாய்மையை
வரைய வார்த்தைகள்
தேடித்துலைந்தது இவனது உரக்கம்
என்றும்...என்றென்றும்...