அவசரமான உலகத்தில் வளரும் சமுதாயம்

மூன்று வயது குழந்தை
கைப்பேசி, லேப்டாப்
என்று காலையில்
எழுந்தவுடன் அடம் பிடிப்பு,
அதில் ஏதேதோ 'கார்ட்டூன்'
போட்டு பார்க்க பழகி விட்டது
அந்த குழந்தையின் சிறு விரல்கள்
துயில் எழுந்தவுடன் 'தொழுதிடு'
என்று பழக்க வீட்டில் யாரும் இல்லை
கூட்டு குடும்பம் இன்றில்லை
தந்தையும் தாயும்
பணிமீது செல்ல , குழந்தை
.செவிலித்தாய்' இல்லத்தில்
அவசரமான உலகம் இது
வளரும் சமுதாயம் !- குழந்தை
நல்லவை கற்பது எப்போது?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-May-18, 5:42 am)
பார்வை : 95

மேலே