பிறந்தநாள் வாழ்த்து

இவள்!!
ஐந்தாம் வயதிலிருந்து கைப்பிடித்து நடந்தவளல்ல,
அமர்ந்து ஆயிரமாயிரம் கதை பேசியதுமில்லை,
பார்வையில் விழுங்கியவளல்ல,
பாசத்தால் பிணைக்கைதியாக்கியவள்...
ஆனால்,
நான் மரணிக்கும் தருணங்களில் எல்லாம் என்னை ஜனனிக்க செய்பவள்...
என்னவள்!!
துள்ளியெழும்பி ஓடும் மான்கூட்டதின் தலைவி,
தூரிகைக்கொண்டு தீட்டப்படாத ஓர் ஓவியம்!!

என்னவள்!!
நீந்திச்செல்லும் மீனல்ல,
எதிர்நீச்சலிடும் தன்னம்பிக்கைக்காரி!!
பட்டுப்பூச்சிகளுக்கு பாடம் நடத்தும் இவள் ஓர்-பள்ளிக்கூடத்தின் தலைவி-ஆனால் பண்பிலோ பல்கலைக்கழக முன்னோடி...
எட்டியெழுப்ப முடியாதது என்னவோ அந்த சூரியனைத்தான் ,
ஆனாலும் எல்லோருக்கும் உதவும் எண்ணத்தில் என்னவளின் கீழ்தான் அந்த சூரியனும்..

என் சிந்தையில் தோன்றியதை தன் சொல்லில் கூறும் மந்திரக்காரியே!!
என் விடைத்தெரியா வினாக்களுக்கெல்லாம்,
உன் ஒற்றை வார்த்தையில் நான் ஓராயிரம் விடைக்காண்பேன்!!
உருவத்தால், உயிர்ப்பாள் வேறுபட்டாலும், சொல்லாள், செயலாள் உறவானவள் நீ!!
சில நேரங்களில் நான் கூறவருவதை மறுக்கிறாள் என்று நினைக்கும் முன்பே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவாள் காரணம் பின்புதான் புரியும் நான் கூறியதின் மீதியைத்தான் இவள் கூறினாளென்று....
இவள் !!
எனக்கு கிடைத்த பொக்கிஷமல்ல,
கடவுள் கொடுத்த வரம்...
நட்பாயல்ல நம்பிக்கையாய்!!
தன்னம்பிக்கையாய் அல்ல தாயாய்!!
சந்தர்பங்களில் அல்ல சகோதரியாய்!!
என்னவளே!!
என்றும் நீ இன்பமுடன் வாழ நினைக்கும் உன்னுயிர் தோழி...

எழுதியவர் : இரா.சுடர்விழி (15-May-18, 9:15 pm)
சேர்த்தது : சுடர்விழி ரா
பார்வை : 231

மேலே