அன்புடன் கிடா

கந்தக பூமியில இருந்து
காங்கேயம் ஒன்னு கெளம்புச்சு - அது
இருநூறு மைல் தாண்டி
எருமையூர் வந்து சேர்ந்துச்சு - வந்து
கிடா கொட்டகை ஒன்னுல
ராஜா வாட்டும் இருந்துச்சு - அங்க
திருட்டு பூன தப்பு செஞ்சா
திட்டாம தொறத்தாம திருத்துச்சு - வாடிக்கையா
எம்பி துள்ளுற கிடாவுக்கு
வண்டி தள்ளவும் சொல்லி குடுத்துச்சு - ஊருல
பிரிஞ்சு கெடந்த எல்லாத்தயும்
புரிஞ்சு நண்பனா இருந்துச்சு - எப்பவும்
சந்தோசத்த மட்டும் பகிர்ந்துக்கிட்டு
சங்கல்ப்பத்த முழுங்கி மறச்சுது - பெருசா
நட்பு வட்டம் ஒன்னு சேர்த்துக்கிட்டு
நடுவுல நாயகனா இருந்துச்சு - ஒருநாள்
வேற எடம் போக போறதா
வேப்பங் காய் தகவல் தந்துச்சு - நாங்களும்
வழியுற கண்ணீர தொடச்சுக்கிட்டு
வழி அனுப்பி வைக்குறோம் - என்னைக்கும்
பழகின பாசம் நெனப்புல இருக்கும்
தொடர்த்து தொடர்புல இருப்போம் - அன்புடன்
கிடா