கவிதாஞ்சலி -2

காலை நேரம் மெல்ல தன் சூரிய கதிர்களால் பூமியை ஆக்கிரமிக்க தொடங்கியது .

அஞ்சலி டிவி ரிமோட் எடுத்து ஆன் செய்தாள்.

டிவி -இல் shin chan தொடர் ஓடிக்கொண்டு இருந்தது.

"அத்து, get up baby, already its too late" கூறி கொண்டே அஞ்சலி படுக்கை அறையில் நுழைந்தாள்.

"ப்ளீஸ் மம்மி , இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கிக்கிறேனே! " சிணுங்கினான் அத்து.

" No way, baby. Shin chan கூட போட்டுட்டாங்க . ஸ்கூல் போகணும்ல. எழுந்ததுடு செல்லம் . Today I have parents meeting in your school. " என்று கூறி கொண்டே அத்துவின் போர்வையை இழுத்தால்.

"இன்னும் இந்த குட்டி பையன் தூங்கிட்டு தன் இருக்கானா ? என்று கூறி கொண்டே வீட்டுக்குள் வந்தாள் கமலாம்மா.

"இங்க பாருங்க ஆண்ட்டி இவன் தொல்லை தாங்க முடில ஆபீஸ் வேற போகணும் இவன் ஸ்கூல்ல வேற இன்னிக்கு மீட்டிங் இருக்கு . மணி 7.30. ஆச்சி . இன்னும் இவன் எழும்பல" என்று சலித்து கொண்டே சமயலறைக்கு சென்றாள் அஞ்சலி .

" நீ விடுமா, நான் அவனை கெளப்புறேன். நீ போய் ரெடி ஆகு" என்று அத்துவை ஸ்கூலுக்கு ரெடி ஆக்கினாள் கமலாம்மா .

யார் இந்த அத்து & அஞ்சலி !

அத்து - 5. வயது சிறுவன் ஆதவன் . சூரியனை போல பிரகாசமாக அவன் வாழ்வு இருக்க வேண்டும் என்பதற்காக அஞ்சலி ஆசையாக அவன் கருவில் இருக்கும் போதே தேர்வு செய்தாள். பெயருக்கு ஏற்றார் போல் பிரகாசமான வட்ட முகம் . மாநிறத்தை விடவும் சற்று குறைவான நிறம் . கருப்பானாலும் கலையான சிரித்த முகம்.

அஞ்சலி - 26. வயதான இளம் பெண் . சாப்ட்வேர் கம்பெனி இல் வேலை செய்கிறாள் .


"பை கமலாம்மா " என்று கூறி கொண்டு அத்து ஸ்கூல் bag மாட்டி கொண்டே கேட் கு வெளியே வந்தான் .

மம்மி , யு ஆர் late now" என்று கிண்டல் செய்த படியே இருக்க , " ஏன்டா சொல்ல மாட்ட . உன்ன ரெடி பண்ண போய் நான் லேட் ஆக வரேன் " என்று பொய் கோபம் கொண்டு துப்பட்டாவை சரி செய்தபடியே வீட்டை விட்டு வெளியே வந்தாள் .

scooty இல் இருவரும் சிட்டாய் பறந்தனர்.

10. நிமிடத்திற்கு ஒரு முறை கை கடிகாரத்தை பார்த்து கொண்டே இருந்த அஞ்சலியை "வாட் மம்மி . time பாத்துட்டே இருக்கீங்க . any problem ?" என்று கேட்டான் அத்து .

"எஸ் பேபி . இன்னிக்கு முக்கியமான நாள் தான் டா எனக்கு. சீக்கிரம் போகணும் . " என்று கூறி கொண்டே அத்துவின் களைந்த முடியை தன் கைகளால் சரி செய்தாள் .

ஆதவன் parent ! ப்ளீஸ் கம் " என்ற டீச்சர் அழைப்பினை கேட்டு இருவரும் உள்ளே சென்றனர் .

"குட் மோர்னிங் மாம் ! என்று சிரித்த முகத்துடன் வரவேற்றார் ஆதவன் கிளாஸ் டீச்சர் .

"ஹலோ மேடம் . ஹொவ் ஆர் யு ? " என்று கேட்டு கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தாள் அஞ்சலி . ஆதவன் அஞ்சலி அருகில் நின்று கொண்டான் .

"Am good . Thank you. ஆதவன் how was your holidays ? "

"yes . It was good" என்று புன்னகைத்தான் ஆதவன் .

"ஸ்கூல் ல எப்படி படிக்கிறான் . is everything fine with him ? " பதட்டத்துடன் கேட்டாள் அஞ்சலி.

ஆதவன் ரொம்ப குட் பாய் . நோ இஸ்ஸுஸ் வித் ஹிம் . லீவு மட்டும் கொஞ்சம் பாத்துக்கோங்க . otherwise everthying is perfect " என்று கூறிய டீச்சர் இடம் விடை பெற்று கொண்டு வெளியே வந்தனர் இருவரும் .

"அத்து உன்ன போய் குட் பாய் னு சொல்ராங்க உங்க மிஸ் . உன்ன பத்தி எனக்கு தான தெரியும் " என்று கூறி சிரித்தாள் அஞ்சலி .

"அம்மா !" என்று பொய் கோபம் கொண்டான் அத்து .

"சாரி சாரி . மை பேபி இஸ் ஆல்வேஸ் குட் & cute " என்று கூறி கொண்டே கன்னத்தில் முத்தமிட்டாள் .

"கிஸ் குடுத்து ஏமாத்த பாக்காதீங்க மா . ப்ரோமிஸ் பண்ணா மாறி இந்த வீகென்ட் என்ன movie கூட்டிட்டு போகணும் ."

"sure baby "

"ஓகே மா . பை . நான் கிளாஸ் கு போறேன் . சி யு evening at home" விடை பெற்றான் அத்து .

அவன் போகும் வரை அவனையே பார்த்து கொண்டு , பெருமூச்சுடன் தன் scooty ஸ்டார்ட் செய்து வெளியேறினாள்.

அவள் மனம் எதையோ யோசித்து கொண்டு சென்றது . கை பையில் ஒலித்த கை பேசியின் சத்தத்தால் நிஜ வாழ்க்கைக்கு வந்தாள் .

"ஹலோ " - அஞ்சலி

"how long am waiting here ? எங்க இருக்க " - எதிர்முனை அழைப்பு

"டிராபிக் இருக்கு இங்க . just 5. mins , வந்துடுறேன் " - அஞ்சலி

"come soon . next is ur case "- என்று கூறி கொண்டு எதிர் முனை துண்டிக்க பட்டது .

சலித்து கொண்டு தன் வாகனத்தை பார்க் செய்து விட்டு Chennai உயர் நீதி மன்றம் நுழைந்தாள் அஞ்சலி .


தொடரும் .......

எழுதியவர் : கண்மணி (17-May-18, 1:50 am)
சேர்த்தது : Kavitha
பார்வை : 96

மேலே