நீ இல்லா கணங்கள்

நீ இல்லா கணங்கள் !!!


அடி என்னவளே,

நீ இல்லா இரவில்,
உறக்கம் கூட இரக்கமற்று பார்க்குதடி !

நீ இல்லா நித்திரையில்,
கனவு கூட கல்லறையில் உறங்குதடி !

நீ இல்லா பயணத்தில்,
மைல்தூரம் கூட நாட்களாகி போனதடி !

நீ இல்லா நாட்களில்,
நொடிகள் கூட யுகங்களாகி போனதடி !

அடி என்னவளே,
நீ இல்லா கணப்பொழுதில்,
என் இதயம் கனக்குதடி,
என் சுவாசம் காற்றினிலே கரையுதடி,
என்னவளே வந்து என்னோடு கலந்துவிடு !!!

பிரிவுடன்
தௌபீஃக்

எழுதியவர் : தௌபீஃக் (17-May-18, 6:17 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
Tanglish : nee illa kannkal
பார்வை : 733

மேலே