தேவை

அன்பான தாய்,
ஆருயிரான மனைவி,
இயலாமையில் உதவும் அண்ணன்,
ஈகையில் சிறந்துவிளங்கும் தந்தை,
உண்மையான நட்பு,
ஊக்கம் கொடுக்கும் தோழி,
எண்ணிய இளமை,
ஏடு எடுத்து படிக்கும் அறிவு,
ஐம்புலன்களின் கட்டுக்கோப்பு,
ஒளிவு மறைவின்றி பேசும் உள்ளம்,
ஓய்வற்ற தேடல்,
ஔ(அ)வ்வளவும் பெற்று தன்னிகரற்று விளங்கும் போது,
ஃ ன் அடக்கம்

எழுதியவர் : முத்துக் குமார்.அ (17-May-18, 9:42 am)
சேர்த்தது : முத்துக் குமார்
பார்வை : 128

மேலே