உமிழ்நீர் சொரிந்தோடும் தமிழதிகாரம்

உழக்குநிறை பழந்தமிழே புழக்கத்தில் அழகென்றால்
கிழக்கொளிர வழக்காடி நிழல்நீக்கி எழக்கூடும்...

மொழியழகே...!

விழிகாணும் வழியெங்கும் செழிந்தோடி தொழில்கொண்டாய்
எழில்மிகு கழிமுகத்தில் அழகியலால் பொழில்கொண்டாய்...

கரைகாணா வரையறையை திரைக்கதையில் உரைத்திருக்க
அரைநாழி தரைதொட்டே நரைசூடி விரைந்துவந்தேன்...

குறைகாற்று சிறைதுயில உறைந்திருக்கும் இறைபோன்ற மறைபொருளே
பறைசாற்றி நிறைவேற்ற கறைகடந்து முறையேவா  அறைநிறைக்க...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (16-May-18, 9:46 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 59
மேலே