மதுக்கிண்ணம்

களை பறிக்க
வந்தவள்
காளையின் மனசை
பறித்து சென்றவள்!

அவள் சேலை கட்டும்
விதம்
என் உயிரை குடிக்கும்
நிதம்!

அவள் ஜடை பின்னும்
அழகு
ஜாடைகள் பிறக்கும்
குடகு!

அவள் உதிர்க்கும் சிரிப்போ
மத்தாப்பு
காதல் குளிருக்கு தரும்
கதகதப்பு!

அவள் இடுப்பில் வைப்பதோ
குடம்
அது எனக்கே உரிய
இடம்!

அணிந்திருக்கும் வளையலோ
தங்கம்
நான்தான் அவளுக்கேற்ற
ஆம்பள சிங்கம்!

அவள் நடக்கும் நடையோ
அன்னம்
எனக்கது போதை தரும்
மதுக்கிண்ணம்!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (19-May-18, 12:09 am)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 157

மேலே