கனவு கண்டேன்

நானும் பட்டு சேலைக் கட்டி
பூ மாலைச் சூடி
மணமேடை ஏறி
மணவாளன் அருகில் அமர
அவன் ஓரக்கண்ணால்
என்னை ஒரு ஜாடையாக பார்க்க
கனவு கண்டேன்!
கனவு கண்டேன் !!
உறங்காமல் கூட
கனவு கண்டேன்
அந்த திருநாளை எண்ணி
கனவு கண்டேன்
என் திருமண நாளை எண்ணி
கனவு கண்டேன்
என்றோ நிகழப் போவதையெல்லாம்
எனக்குள் கனவாகக் கண்டேன்
இன்று அத்தனையும்
நனவாகக் கண்டேன்
அவன் கரம் கோர்க்க
நேரங்காலம் வந்தது
என் இன்னல் எல்லாம்
தூரம் தள்ளி போனது
இனி நான் என்றால்
நான் மட்டும் அல்ல
அவன் என்றால்
அவன் மட்டும் அல்ல
கல்யாண மாலை
என் தோல் சேர்ந்ததே
என் கண்ணாலன்
முன்னே என் நாணம்
தோற்றதே
அவன் முடி போடும் தாலி
என் நெஞ்சோடு வாழும்
சுபம் என்ற வார்த்தைக்கு
பொருள் இன்று கண்டேன்
திருமண வாழ்க்கை
தினம் தினம் இனிக்கும்
என் உயிர் அவன்
உடல் சேரும்
அவன் முகம் கண்டே
என் ஆயுள் தீரும்
அவனோடு தானே
என் ஆசை நோயும்
அவன் விரல் தீண்டி
தினம் அது தேயும்
விழிக்கின்ற
பொழுதெல்லாம்
அவன் நினைவோடு
இருப்பேன்
கண் இமை
சரிகின்ற பொழுதெல்லாம்
அவன் கனவிலே கிடப்பேன்
இந்த ஒரு ஜென்மம்
போதாது
இனி ஒரு ஜென்மம்
வேண்டும் நான்
அவனோடு வாழ
என் முந்தானை சேலை
அவன் வேட்டியோடு சேர......!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (19-May-18, 7:12 pm)
Tanglish : kanavu KANDEN
பார்வை : 185

மேலே