❤ஒரு தலை காதலா❤

ஒரு தலை காதலா
உனதிரு விழிகளால்
மனதினைத் தந்திடு!
என்னை உனதாக்கிடு!

கருவென சுமக்கிறேன்
காதலை நெஞ்சினில்...
உயிருடன் கலந்திடு!-என்
உறவைப் புதிதாக்கிடு!

உன் விரலுடன் என் விரலுமே
ஒன்றாகிட வேண்டும்.
உன் மார்புகள் நான் சாய்கிற
பொன் மஞ்சமாய் வேண்டும்.

ஒருமுறை ஒருமுறை
உன் காதலைச் சொல்லிடு...
உதட்டினில் உமிழியால்
உன் உயிரையும் தந்திடு!

ஒரு தலை காதலா?-இது
நெருங்கையில் மறைகிற
கானலா காதலா? - என்
ஒரு தலை காதலா...

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (19-May-18, 7:04 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 3787

புதிய படைப்புகள்

மேலே