நீ கண் சிமிட்டினால்

நீ முகம் பார்க்கும் கண்ணாடி
யாயென திருவிழி களுன்முன்
நிலைகுலையாது நிற்கின்ற
பாக்கியம் கிட்டிட ஆசிக்கிறேன்
நீ கண் சிமிட்டினால் போதும்
பச்சை க்கொடி யெனவாகுமே


நீ பிறந்த வீட்டிற்கு விடைக்கூறவுன்
வருகைக்காய் வரவேற்க கால் 
கடுக்க காத்திருக்கும் புகப்போகும்
வீடென்றன் இதயமாய் இருந்திடக் கூடாதா என்றேங்கி நிற்கு மெனை 
யேற்க நீ கண் சிமிட்டினால் போதும்
காலங்கா லமானாலும் காப்பேனடி


நினைப்பது நடந்துவிட்டால் நீ
காதலக்கு கிடைத்த விருந்தென
எண்ணினா லென்னிலும் மூடன் வேறெவனு மிருக்க மாட்டான் 
காதல் நோய்க்கு கிடைத்திட்ட வரு
மருந்தென கொண்டிடுவேனடி
நீ மட்டும் கண் சிமிட்டினாலே


வாய்த் திறந்து வார்த்தைப் பேச
வாக்குப் பிழையாகிடுமோ வென
மனம் திறந்து பேசுகிறேன் அவ்
வலைகளுன் காதில் வந்து தூது
சொல்ல நீ கண் சிமிட்டினால் உளம்
மகிழும் மகிழ்வுக்கு குறைவேது


கனவினில் கண்டவளை யென்
நினைவி லிருந்து விலக்கவோ
வெருக்கவோ செய்யு மதிகாரம்
இவ்விருப்பியால் எழுதவில்லை
எழுதினாலும் பிரம்ம னவனதை
அவனோடு போராடி மீட்ப்பேனடி 
சற்றே நீ கண் சிமிட்டினால் போதும்

°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
**நீ கண் சிமிட்டினால் **
கவிதைமணி யில்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (22-May-18, 11:39 am)
பார்வை : 166

மேலே