பேனா என சொல்லும்போது
அந்தப்பேனா எழுதும்
என் கவிதையை.
எழுதும் அந்தப்பேனா
எனதுபேனா போலல்ல.
இரண்டு வார்த்தைகளில்
மூன்று அரக்கர்களின்
மரணம் குறித்தும் எழுதியது.
இன்னும் சொன்னால்..
ஒரு பகல் பொழுதில்
அசை போடும் பசுவின்
வால் நிறம் பற்றியும்...
நீண்ட சாலையில்
இரவை தேய்த்தபடி
ஒருநாளில் இருந்து
இன்னொரு நாளுள் புகுந்து
வீறிட்டு செல்லும்
கருப்பு வாகன மேற்கூரை பற்றி...
நாளை வரவிருக்கும்
தந்தையின் மரணம் குறித்து
புரிதல் அறியாத ஒரு
குழந்தையின் பால்பவ்டர் பற்றி...
ஹெலிகாப்டரின்
அந்தரங்கம் பற்றி...
விண்டோஸ் பைரஸியில்
சங்கேத குறியீட்டியல் பற்றி...
மெதுக்கீடும் முயல்கள் பற்றி...
பேனா எழுதும் ஒரு கையால்.