நித்திரை மோகம்

புட்கள் முத்தமிடும் தீண்டுதல்களில்
புதுவித உணர்ச்சியொன்று
புழுவாய் துள்ளவைப்பது
இதுநாள் வரை
இல்லாத மாற்றமாக இருந்து வந்தது- அது
புரியும் நேரம் இன்று வந்தது!
பருவ வயதின் மாற்றத்தினை
நான் பார்த்து உணர்ந்துவிட்டேன்- அதில்
முழுநிலவாக என்னை பறிகொடுக்க
முற்பட்டுவிட்டேன்...!!

நீரில் நான் நீராடும் போதும்
மார்போடு வெப்பமொன்று
மாறாமல் தொடர்வதின்
மயக்கம் அறிந்துகொண்டேன்
அதில்
அனுபவம் அறிந்துகொண்டேன்!

என்னவன் என்னை தொடவேன்டுமென்ற
என்தேகம் ஏனோ அவன்
விரல்களுக்கு விருந்தாக
விரும்பி தவிக்கும் அரும்பு மலர் நானாக
ஆசை வெடிக்கின்றது....

அறையை தாழிட்டு வரும்வரை
தாமதமென்று எதையும்
அறியவில்லை -- தனிமையில்
தானக உறங்கும் வேளையில்தான்
உறவாட அவன் வேண்டுமென்று
உள்ளம் அலைகின்றது.....

வெளிச்சம் தேவையில்லையென்ற
நிலைவந்த போதும்
வெட்கமென்ற போர்வை -- விடாமல்
தொடர்ந்துக்கொண்டு தொல்லையிடுவது
கொள்ளையை தடுத்துவிடுமோ என்ற
சிந்தனை என்னை
சிதைக்க தூண்டிவிட்டது....

எதையோ அடைகாத்து வந்த
அச்சங்கள் இன்று
எங்கோ அடைக்களம் தேடும்
அதிசயம் அவசியமாகிவிட்டது....

கண்கள் மூடவேண்டிய இரவுகளில்
கண்கள் மட்டும் மூடாமல்
காலங்களை எழுப்பும்
கால மாற்றம் மாறிவிட்டது....

பஞ்சு மெத்தையின் மீது
நெஞ்சம் படுத்துறங்காமல்
நெடுந்தூரம் பயணம் செல்ல
நெளிவுகள் தோன்றிவிட்டது...

நீர் தான் தாகமென்றால்
நிச்சயம் அருந்தியிருப்பேன் -- ஆனால்
நீ தான் தாகமென்பதாலே
விரும்பி தவித்துக்கொண்டு! நெற்றியில்
குங்குமம் சூடும் வரை
பருவ சூட்டில் உருகிகொண்டிருக்கிறேன்!!

கார்மேகம் போன்ற கருங்கூந்தளில்
போர்கள மேகங்கள் சூழும்
இன்ப கலைகளை இரவுகளில் கற்க
வாகைசூடி -- அவன்
வந்து சேரும்வரை
ஓயாமல் நீடிக்கும்
இந்த நித்திரை மோகம்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (22-May-18, 7:40 pm)
Tanglish : niththirai mogam
பார்வை : 165

மேலே