மாலை இட வேண்டும்

அதிகாலை நேரம்
கண் விழித்து
சோம்பல் முறிக்கும் முன்
வாசல் நோக்கி விரைந்தேன்
என்னவள் கோலமிட
வாசல் வரும் வேளை...
கோலமிடும் வேளை
கல்லூரி செல்லும் வேளை
இப்படி
ஓரிரு முறைகள் மட்டுமே
அவள் முகம் காண முடியும்...
ஓடி ஓடி தேடி தேடி
அவள் முகம் காண தவிக்கின்றேன்...
எதோ ஒரு சில நொடிகள்
ஓர கண் பார்வை வீசுவாள்...
அதில் ஒரு ஆனந்தம்...
இதுவல்ல கண்ணே
என் ஆசை
உன் இரு கண்களிலும்
என் முகம் நிறைய வேண்டும்
ஊர் அறிய உன் கழுத்தில்
மாலை இட வேண்டும்