அபூர்வராகம்

உள்ளத்தில் ஊற்றெடுத்து
இல்லாத ஓன்றுஉருவாகி
வல்ல சக்தியாகி வரம் கேட்டு
அன்பையே அழுத்தமாக்கி
மென்மையான பார்வைகளால்
நேர்த்தியாய் அன்பு வேண்டி
தனக்கென்று ஏதுமின்றி
தவிக்கின்ற அவள் மனதில்
என்னதொரு மாற்றம் இது
மாயமா இல்லை தெய்வீகமா
இதுதான் காதல் உள்ளத்தின் மவுனராகம்
அவள் மட்டும் கேட்கும்
அற்புத கானம் அபூர்வராகம்

எழுதியவர் : பாத்திமாமலர் (22-May-18, 9:35 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 85

மேலே