காதல் பேனா
நான் கவிதை எழுத
உதவும் கருவி
கற்பனையில் நான் வானத்தைப்
பார்த்திருக்கும் போது காத்திருக்கும்
அவள் பற்றி எழுதும் போது
முகம் மலரும்
அவள் பற்றித் தொடராவிட்டால்
முகம் சுளிக்கும்
வேறு எழுதினால்
வேண்டா வெறுப்பாய் நகரும்
வாள் முனையிலும் கூரியது உனது
என்றால் ஆனந்திக்கும்
சமூக அரசியல் அவலங்களை
சளைக்காமல் எழுத்திச் செல்லும்
மீண்டும் அவளைப் பற்றி நினைக்கும் போது
நான் எழுதப் பார்த்திருக்கும்
அவள் முன் வந்து நிற்கும் போது
இனி எனக்கென்ன வேலை என்று
ஓய்வெடுத்துக்கொள்ளும் !