என்னவள்

வசந்த கால தென்றலடி நீ
குளுமையில் நீ பௌர்ணமி நிலவு
குயிலோசையடி உந்தன் குரலின் இனிமை
சிற்றருவி ஓசையடி உந்தன்
கைகளின் வளையலோசை
மலரல்லவோ தந்தது உந்தன் மென்மை
அன்னமே நீ நடந்து வரும் போது
பூமியும் அதிராது என் நெஞ்சும் அதிர்வதில்லை
எளிமையிலோ நீ இலவம் பஞ்சு
எனக்குமட்டும்தான் உந்தன் தோற்றத்தின்
எழிலெல்லாம் என்று நினைத்து
நீ உந்தன் மேனியில் ஆடை உடுத்தும்
அழகே அழகு அது உந்தன் பெண்மைக்கு
இலக்கணமென்றால் அதுதான் கற்பு
என்று நான் சொல்வேன்
உந்தன் பார்வையில் அன்பும் கனிவும்
பெண்ணே உன்னில் மறைந்திருக்கும்
உந்தன் தாய்மைக்கு அத்தாட்சி
என்னவளாய் நீ வாய்த்தமைக்கு
அந்த ஈசனுக்கு என் நன்றிகள் ஆயிரம்
இத்துணை அழகும் கொண்ட நீ
நான் பாடும் எழிலரசி எந்தன் சௌந்தர்யா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-May-18, 8:06 am)
Tanglish : ennaval
பார்வை : 64

மேலே