கர்ப்பம்

கர்ப்பம்
""""""'''''''''''
தள்ளிப்போன நாட்களை
கொஞ்சம் நிறுத்தி
அழகு பார்க்க எனக்கு
மனசு பகீரென்றது!

முன்பும் இப்படித்தான்
ஒவ்வொரு தடவைகளிலும்
தவறி கரைந்துபோகையில்
அடிவயிறு கலங்கி
நம்பிக்கை நிலைகுலையும் !

குமட்டலை
தாங்கிப்பிடிக்க
எலும்பிச்சையும்,
வாய்க்கச்சளுக்கு
மாங்காயும்,
கடந்தபொழுதுகளில்
எட்டாக்கனியாப்போச்சு!

நள்ளிரவு தாண்டியும்
உறக்கத்தை
அணைக்கமுடியாமல்
நினைவுகளில்""
குழந்தையின் சினுங்களுக்கு
நிலவு பால்பொழியும்!

எப்பொழுதாவது சில தடவையேனும்
நிரம்பிய வயிறும்,
குழந்தையின் உதையும்,
நாரியை பிடித்த நடையும்,
சுகமானது!

அடி கறுப்பி """ தெத்துப்பல்காரி
யோசிக்காமல் நித்திரை கொள்ளடி"''''

கொழுத்தும் வெய்யிலுக்கு
குற்றாலத்து அருவிபோல""
நீ எப்பொழுதும் எனக்கு
குழந்தையடி என்று
சொல்லி என்னை அள்ளி அணைத்துக்கொண்டான்""
முள்ளுமீசைக்காரன்!!!

ஆக்கம் லவன்
""" """""""" """"""" """"

எழுதியவர் : லவன் டென்மார்க் (23-May-18, 9:33 am)
பார்வை : 438

மேலே