நேயம்
பசித்தோர்க்கு புசித்திட கொடுத்தல் நேயம்......
பகைவனுக்கும் மறவாமல் உதவுதல் நேயம்.....
படைத்தவனுக்கு நன்றி சொல்லி வாழ்வது நேயம்....
பிற பெண்ணையும்
தாய்போல் எண்ணுவது
நேயம்.....
பிறந்த மண்ணிற்கு புகழாரம் சேர்ப்பது நேயம்....
பெற்றோரை பேணிக்காத்து வாழ்ந்திடல் நேயம்.....
பிறர்வலிதனை உணர்ந்து உதவிடல் நேயம்......
கடைசி மூச்சு உள்ளவரை
தம் தேசம் காப்பது நேயம்....
சுயநலம் மறந்து பொதுநலம் செய்ய துணிவது நேயம்......
காயம் கொண்ட இதயங்களை தேற்றுவதும் நேயம்......
உலகம் நிலைக்க இறைவனை வேண்டுதலும் நேயம்......
பிறர் மழலைகளை நம் மழலையாக நேசிப்பது
நேயம்......
நேயமில்லா பல காலம் வாழ்வதைவிட
நேயம் கொண்டு சாவது மேலென ....நினைப்பதும்
நேயம்......
நேயம் நேயம்.....நம் மனதில் சாயம் பூசாமல்
இருத்தலே நேயம்.......
இறைவனை ஈர்ப்பது நேயம்.....
கல்வியை கவர்வது நேயம்....
காதலை பகிர்வது நேயம்...
கடவுள் உன்னை அணுகுவது நேயம்....
உன் உள்ளத்தில்
மலர்வதன் நோக்கம்
நேயம்....
நேயம் உன்னில் நிலைத்தாலே உனது வாழ்வும் உலகை
வெல்லும்..........
நேயத்துடன் வாழு.......
மகிழ்வை கொண்டாடு....