வாழ்க்கை
உடலில் பொலிவும்,இளமையும்
நல்ல உரமும் உள்ளவரை நம்மை
ஆள்வது மோகமும், காமமும் காதலும்
மூப்பு வந்து காயமும் சோர்ந்திடும்போது
உடலால் அவன் நலிய அவள் அவனுக்கு
தாயாய் இருந்து பணி செய்து,அவள்
கட்டிலில் வீழ அவன் அவளுக்கு தாயே
ஆகி, அன்பு செய்து பின்னர் ஒன்றும் புரியாது
இனி இருந்து என்ன பயன் என்று வெறுத்து
இருக்கையில் சிலருக்கு வந்து சேரும்
ஞானோதயம், 'அவன் பாதம்' தேடி அடைய,
இருண்ட வாழ்க்கைக்கு தீபமல்லவோ 'அவன்'