அழகிய தண்டனை

அவள் எனக்கு
அழகிய தண்டனை
கொடுப்பாள்.....!

நான் அவளிடம்
பேச நினைத்தால்
அவள் என்னிடம்
பேச வெறுப்பாள்.....!

நான் அவளை
பார்த்து இரசித்தால்
அவள் என்னை
பார்க்க மறுப்பாள்.........!

நான் அவளை
நெருங்கி வந்தால்
அவள் என்னை
விலகிச் செல்வாள்......!

நான் அவளை
என்னுள் சிறைபடுத்த
நினைத்தால்
அவள் என்னை
அவளுள்
சிறைபடுத்திக்
கொள்வாள்
கொஞ்சம் கொல்வால்........!

மொத்தத்தில்
அவள் எனக்கு
அவ்வப்போது மட்டும்
அழகிய தண்டனை
கொடுப்பாள்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (26-May-18, 1:35 pm)
Tanglish : alakiya thandanai
பார்வை : 53

மேலே