உலகம் துயிலட்டும்
உலகம் துயிலட்டும்....!
காலை கதிர் சாய்ந்தும்
காலச் சக்கரம் சுழன்றிட
ஆலை இயந்திரமாய் உலவிய
அனைத்துயிரும் ஓய்ந்திட
மாலை மங்கு ஒளியில்
மலர்களை தென்றல் தழுவிட
சோலைக் கச்சேரி குயில்கள்
மௌனத்தில் ஆழ்ந்திட
பாலை குளிரிருளில்
பால்நிலவு பொலிந்திட
தொலை தூர தீவாந்தரம்
நீர்ச்சுனைகள் தேடிட
வாலைக் குமரியர்கள்
வாலிபங்களை வசியமிட
லீலை நடுநிசியோடு
உலகம் துயிலட்டும்!
கவிதாயினி அமுதா பொற்கொடி