மருதாணி
சின்ன சின்ன கோடுகள்
வளைத்து நெலித்து வட்டமிட்டு
பாரம்பரிய வடிவமைப்பு
பலவித உருவ அமைப்பு
பல வகையான வண்ணத்துடன்
பல நேரம் காத்திருந்து
மனதுக்குள் ஒருவரை நினைத்தும்
சிவக்க வைக்கும் இளம்பெண்கள்
ஐந்து வயது பெண் குழந்தையும்
ஆசைப்படும்
சிவக்க சிவக்க அழகு
சிவந்ததும் அழகு
ஆசை படாத பெண்கள் இல்லை
மருதாணி உன்னை வைக்காதவர்
எவரும் இல்லை........