உரிமைதேசம்

நகரமெங்கும்
வறண்ட காற்று.

கடற்கரை உப்பின்
வாசத்தோடு
உரிமைக்காக
ஒரு சத்தியாகிரகம்...

கட கட வென
துப்பாக்கி சூடுகள்...

செத்து விழுகின்றன
உடல்கள் மட்டும்....

கார்பொரேட்
மிருகங்களின்
அக்கரமிப்பில்
நிமிர்த்து நிற்கிறது
ஒரு ஜீவன்...
யாவும் உரிமைக்காக

பலகோடி ஆண்டுகளாக
நீதி மறுக்கப்பட்டவர்களின்
கதறல் கேட்டு கடவுளின் காது கிழிந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது.

குருதி வற்றிபோகட்டும்
உரிமைக்கான
எழுதல் மட்டும்
எங்களோடு....

எழுதியவர் : (27-May-18, 4:34 am)
சேர்த்தது : கோபிரியன்
பார்வை : 30

மேலே