444 வழியாம் உலகுறும் இன்ப துன்பம் மனங்கொள்ளார் – துன்பம் 10

கலித்துறை

அயலா ரொண்பதிக் கேகுவார் வழித்துயர்க் கஞ்சார்
வயவை தன்னிற்காண் பொருளையும் வாஞ்சியார் வசுதை
உயர்பெ ருங்கதிக் கேகுமா றென்னலால் உலகின்
துயரை யின்பினை மதித்திடார் துகளறு நீரார். 10

- துன்பம்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”வேறு ஒரு அழகிய நகருக்குச் செல்வோர் வழியில் ஏற்படும் துன்பங்களுக்கு அஞ்ச மாட்டார். வழியில் காணும் வியத்தகு பொருள்களையும் விரும்ப மாட்டார். கருதிய நகருக்கே கடிது நடந்து செல்வர்.

அது போன்று, இவ்வுலகை வானோர்க்கு உயர்ந்த உலகம் புகுவதற்கு வழியென்று கூறுதலால் உலகில் நேரும் துன்பத்தையும், இன்பத்தையும் குற்றமற்ற நற்றவமுடையோர் ஒரு பொருட்டாக எண்ண மாட்டார்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

வயவை - வழி. வாஞ்சியார் - விரும்பார்.
வசுதை - உலகம். துகள் - குற்றம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-18, 3:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே