விரைவில் என் கரம் பிடி
யார் சொன்னது
உன்னை நான் கவனிப்பதில்லை என்று...
எப்போதாவது தலை நிமிர்ந்து பார்க்கும் போது
ஓரக் கண்ணில் முகம் பார்ப்பேன்
தலை குனிந்து
உன்னைக் கடந்து செல்கையில்
உன் கால் விரல்கள்
புரிய வைக்கும் உன் தவிப்பினை...
சுவாசம் உணர்த்தும்
உன் ஏக்கத்தை....
உள்ளுணர்வு புரிய வைக்கும்
நீ என்னைக் காண்பதை
விரைவில் என் கரம்பிடி
உன் தவிப்பைப் பார்க்க
என்னாலும் முடியவில்லை